
கல்லூரி இறுதி ஆண்டு படிக்கிறேன் என்று தான் பெயர் ஆனால் இன்னும் பள்ளியில் தான் படித்துகொண்டிருப்பதை போல் தான் இருக்கிறது. காரணம் தினமும் தேர்வுகள் லேப் தேர்வுகள் என்று நாங்கள் படும் கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா!
கல்லூரிஐ பற்றி நாங்கள் கண்ட கனவுகளை முதலிலேயே தகர்த்து விட்டது இந்த கல்லூரி!
நான் படிக்கபோகும் கல்லூரி சினிமாவில் வருவதை போல் இருக்கும், நினைத்த நேரம் காலேஜ்ஐ கட்டடிக்கலாம் என்றெல்லாம் கனவு கண்டேன் . ஆனால் பள்ளியை
விட மோசமகாக இருக்கிறது.
மீண்டும் பள்ளிக்கே போகலாமோ என்று தோன்றுகிறது. கவலை இல்லா பருவம் !!!!!!!!!!

