மதுரை மாநகரம் உறங்குவதே இல்லை.
அதனால் தானோ "உறங்கா நகரம்" என்ப்பட்டது.
இது சோம்பேறிகளை வளர்க்கவில்லை,
மதுரை மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் சாதிக்கின்றனர்.
மதுரை வரப்போகும் ஆண்டுகளில்
பல சாதனைப்பெயர்களால் அழைக்கப்படவேண்டும்.
இம்மண்ணில் பிற்ந்தவர்களுக்கு தமிழ் கவசத்தைப் போனறது
இங்கு வந்தால் பிறமொழிக் காரர்களும் சுலபமாகதமிழ் கற்று சரளமாக பேசுகின்றனர்.
இந்த நகரத்தின் நடுவே பாயும் நதி (வைகை)சங்கம் வைத்து
தமிழ் வளர்த்த கதைகளையும்,தான் பாய்ந்து இந்நகரத்தை வளப்படுத்தியதையும்இந்நதி சொல்லக்கேட்டு
யாம் மெய்சிலிர்த்தோம்.மதுரையின் அழகுக்கும்,
புகழுக்கும் வேறு நகரங்கள் ஈடாகுமா??
மதுரை என் நகரம், நான் அதில் வசிக்கிறேன் என்பதில்எனக்கு மட்டில்லா கர்வம்.