Thursday, January 1, 2009

தமிழ் பாடல்------- புது விளக்கம்


நான் ராஜ் டிவியில் பட்டிமன்றம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஓர் தமிழசிரியர் பேசி கொண்டிருந்தார். அப்பொது அவர் அந்நியன் என்னும் ஒரு படத்தில் அன்டங் காகா கொன்டகாரி என்னும் பாட்டு இருக்கிறதல்லவ, அதற்கு தன் மாணவன் ஒருவன் அளித்த விளக்கத்தைப் பற்றி கூறினார்.


அன்டங் காகா கொன்டகாரி- இது எவ்வளவு பெரிய தெய்வ பக்தி பாடல் தெரியும டிச்சர் என்றானம்.


அதற்கு டிச்சர் என்னடா கூறுகிறாய் தெளிவாக சொல் என்றாரம்.


பையன்: அன்டம் - உலகம். ஆளும் கொன்டைக்காரி -அன்னை மீனாட்சி என்றான்.


டிச்சர்: அப்போ ரென்டக்க என்றால் என்ன என்று கேட்டார்.பையன்: அந்த பாட்டில் ஐயரெட்டு பல்லுகாரி என்று வரும் அல்லவா ஐயரெட்டு (5,6,8, )5=சிவன்,6=முருகன்,8=விஷ்னு(6= ஓம் சரவணபவ என்ற ஆறு எழுத்து தான்) இவர்கள் அனைவருக்கும் இரு மனைவிகள்.அதனால் ரென்டக்க ரென்டக்க என்று பாடுகிறொம் என்றானாம்.
இதை கேட்டு சிரித்து சிரித்து வயிறு புண்ணயிற்று!!!!!!!!!!!!!உங்களுக்கும் அப்படி தானே?

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்




இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் இனிமையும் சேர்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றேன். புத்தாண்டு புதுமையோடு மலரட்டும்!!!!!!!!!!!!!